இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 192 ரன்னில் சுருண்டது.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் தொடங்கியது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது .இதன் பிறகு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது .
ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. மேலும் இந்திய பவுலர்கள் தொடர்ந்து துல்லியமாக பந்துவீசி நெருக்கடி கொடுத்ததால் தென்னாப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது . இதனால் 62.3 ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 197 ரன்னில் சுருண்டது. இதில் இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.இதனால் 130 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சிஸை தொடங்கியது .