தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இது இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் செஞ்சூரியனில் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 122 ரன்னும், ரகானே 40 ரன்னும் எடுத்தனர். இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்க இருந்தது .ஆனால் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது .இதில் கே.எல்.ராகுல் 123 ரன்னிலும் ரகானே 48 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பிறகு களமிறங்கிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டைஇழந்தனர். குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணியின் ரபடா மற்றும் லுங்கி நெகிடி ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர் .இறுதியாக இந்திய அணி 105.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் லுங்கி நிகிடி 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.