Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA ஒருநாள் தொடர் : 5 வருடங்களுக்கு பிறகு …. கம்பேக் கொடுக்கும் ஜெயந்த் யாதவ் ….!!!

தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் ஜெயந்த் யாதவ் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகின்ற ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் இத்தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார் .சமீபத்தில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் மாற்று வீரராக  ஜெயந்த் யாதவ் ஒருநாள் அணியில் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதியாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதன் பிறகு இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் அவர் விளையாடவில்லை. இதனால் 5 வருடங்களுக்கு  பிறகு இந்திய ஒருநாள் அணியில் ஜெயந்த் யாதவ் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |