தென்னாப்பிரிக்கா அணிகெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம்பெறப்போகும் வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி வருகின்ற ஜனவரி 19 , 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இத்தொடருக்கான இந்திய அணி ஒரு சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது .இந்நிலையில் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் ஒருநாள் போட்டியில் பங்கு பெறுவார் என்பது உறுதியாகியுள்ளது .
இந்நிலையில் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஒருநாள் தொடரில் மீண்டும் இடம் பிடிக்க காத்திருக்கிறார் .இதில் டி20 தொடரில் தனக்கான இடத்தை ஷிகர் தவான் இழந்துவிட்டாலும் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி வருகின்றார் .இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா -ஷிகர் தவான் ஜோடி களமிறங்கலாம் என தெரிகிறது. இதையடுத்து ஐபிஎல் மற்றும் விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேபோல் சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட தமிழக வீரர் அஸ்வின் மீண்டும் ஒருநாள் போட்டியில் இடம் பெறுவார் என தெரிகின்றது .இவர் கடைசியாக கடந்த 2017 -ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.