Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : பந்துவீச்சில் மிரட்டிய ஷர்துல் தாகூர் ….! 5 விக்கெட் கைப்பற்றி அசத்தல் ….!!!

தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர்  5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதில் பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம்  அடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து அஸ்வின் 46 ரன்கள் குவித்தார். தென்னாபிரிக்கா அணி தரப்பில் மேர்கோ ஜேன்சண் 4 விக்கெட்டும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

இதில் தென்னாபிரிக்கா அணியில் மார்க்ரம் 7ரன்னும் ,கேப்டன் டீன் எல்கர் 28 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய கீகன் பீட்டர்சன் தனது அறிமுக போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தினார் .இதில் கீகன் பீட்டர்சன் 62 ரன்களில் ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணி மதிய உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் களமிறங்கிய டெம்பா பவுமா 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.இதில் இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 5 விக்கெட்டும் , முகமது ஷமி 2 விக்கெட்டும்  கைப்பற்றினர்.இதில் ஷர்துல் தாகூர் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டியில் முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

Categories

Tech |