இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் எடுத்துள்ளது .
இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதுகுவலி காரணமாக விராட்கோலி விலகிய நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 50 ரன்னும், அஸ்வின் 46 ரன்னும் எடுத்தனர். இதைதொடர்ந்து 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.இதில் 202 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இதில் களமிறங்கிய கீகன் பீட்டர்சன் அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார்.
இதனால் மதிய உணவு இடைவேளை வரை தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய ஜேண்சண் மற்றும் கேஷவ் மகராஜ் 21 ரன்கள் எடுக்க இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணியை விட 27 ரன்கள் முன்னிலையில் தென்னாப்பிரிக்கா அணி உள்ளது. இதில் இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து முகமது ஷமி 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்பிறகு 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.