இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் நேற்றைய ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சிசை தொடங்கியது .ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரகானே 58 ரன்னும், புஜாரா 53 ரன்னும் எடுத்தனர் . இதனால் தென்னாபிரிக்கா அணிக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி நேற்றைய நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் குவித்துள்ளது.