இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,801 ரன்கள் குவித்துள்ளார் .இதில் 27 சதங்கள் மற்றும் 27 அரை சதங்கள் அடங்கும். இந்நிலையில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 199 ரன்கள் எடுத்தால் 8000 ரன்கள் எடுத்த 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைக்க உள்ளார் .
இதற்கு முன்னதாக இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் ,ராகுல் டிராவிட் ,சுனில் கவாஸ்கர் சேவாக் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் முதல் 5 இடத்தில் உள்ளனர் .அதே சமயம் 27 அரை சதங்கள் அடித்துள்ள விராட்கோலி மேலும் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் ஸ்டீவ் ஸ்மித், ஆலன் பார்டர் மாற்றும் கிரீம் ஸ்மித் ஆகியோரை பின்னுக்குத் தள்ளுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.