Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA: டெஸ்ட் கிரிக்கெட்டியில் புதிய மைல்கல் …. ‘கிங் கோலி’ புதிய சாதனை ….!!!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  100 கேட்ச் பிடித்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 79 ரன்கள் குவித்தார். இதன் பிறகு களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணியில் பவுமாவை விராட் கோலி கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். இது அவருடைய 100-வது கேட்ச் ஆகும். இதன் மூலம் விராட் கோலி 99 டெஸ்ட் போட்டியில் 168 இன்னிங்சில் 100 கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 கேட்ச் பிடித்த 6-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதில் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் 209 கேட்ச் பிடித்து முதலிடத்திலும், வி.வி.எஸ் லக்ஷ்மணன்(135), சச்சின் டெண்டுல்கர் (115) ,சுனில் கவாஸ்கர் (108) ,அசாருதீன் (105)ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

Categories

Tech |