Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் : முக்கிய வீரர் இடம்பெறவில்லை …. இந்திய அணியின் உத்தேச பட்டியல் ….!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிநாளை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது .இதுவரை தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதில்லை.இதனால் இப்போட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது.அதே போல் இந்திய அணியிடம் தோல்வி அடையக் கூடாது என தென் ஆப்பிரிக்காவும் தங்கள் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு கடும் சவால் அளிக்கும். இந்நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை நடைபெற உள்ள முதல் டெஸ்டில் இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏனெனில் தென்னாப்பிரிக்கா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணியில் இடம் பெறப்போகும் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் யார் என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது .இந்நிலையில்  நாளை நடைபெறும் முதல் டெஸ்டில் இந்திய அணியில் 6 பேட்ஸ்மேன் மற்றும் 5 பந்து வீச்சாளர்கள் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அணியில் ரஹானேவிற்கு  பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது .அதேபோல் பந்துவீச்சாளர்களில் இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது  ஷமி , சிராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம்பெறுவார்கள் என கணிக்கப்படுகிறது.

இந்திய அணியின் உத்தேச பட்டியல் :

மாயங்க் அகர்வால், கே.எல் ராகுல், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்,  அஷ்வின், ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா,  சிராஜ்.

Categories

Tech |