Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS SA டெஸ்ட் போட்டி 26-ல் தொடங்கும்….! பிசிசிஐ அறிவிப்பு….!!!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி  வருகின்ற  26-ம் தேதி நடைபெறும்  என பிசிசிஐ அறிவித்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 4 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது .இதற்கான ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 17 -ஆம் தேதி  தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது .ஆனால் தற்போது தென்னாப்பிரிக்காவில்  ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது .

இது தொடர்பாக நேற்று நடந்த பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது .இதில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு செல்வது ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது .இதில் வருகின்ற  17-ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் நடைபெற இருந்த நிலையில்  தற்போது இந்த டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி  நடைபெற உள்ளது .இதேபோல் ஒரு நாள் தொடரும் நடைபெற உள்ளது. ஆனால்  டி20 போட்டி தொடர் ஒத்தி வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

 

Categories

Tech |