Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் தொடர் :துணை கேப்டன் பதவி அஸ்வினுக்கு வழங்கப்படுமா ….? வெளியான தகவல் ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான  எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டனான ரோகித் சர்மா காயம் காரணமாக  விலகியதால், துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது .இந்நிலையில் காயம் காரணமாக டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா இத்தொடரில் இருந்து விலகியுள்ளார் .இதனால் துணை கேப்டன் பதவிக்கு யார்   நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் துணை கேப்டன் பதவிக்கு  நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது .

டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடி வரும் அஸ்வின் அனுபவமுள்ள வீரர் ஆவார் . அதேசமயம் தென்னாப்பிரிக்காவுக்கு பலமுறை சென்று போட்டிகளில் பங்கேற்றுள்ளார் .இதனால் சீனியர் வீரர் என்ற அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அணியில் இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முடிவு எடுத்தால் கே.எல். ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |