தென் அப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என இந்திய அணி வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது .இதுகுறித்து இந்திய அணி பேட்ஸ்மேன் புஜாரா நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது ,”தென்னாப்பிரிக்காவுக்கு சென்று விளையாடும் வெளிநாட்டு அணிகளுக்கு அங்குள்ள ஆடுகளங்களில் வேகமும், வேகப்பந்து வீச்சில் பந்து நன்கு திரும்பும் என்பது தெரியும். எனவே வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் .அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை எங்களால் சிறப்பாக சமாளிக்க முடியும் என நினைக்கிறேன். அதேபோல் போட்டிக்கு நன்றாக தயாராகி வருவதால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்புகிறேன்.
அதேசமயம் அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்களுக்கு தென்னாப்பிரிக்காவில் விளையாடிய அனுபவம் உள்ளது .இவர்களின் அனுபவம் அணிக்கு உதவியாக இருக்கும். பெரும்பாலான அணிகள் தங்கள் நாட்டில் உள்ளூர் சூழலில் சிறப்பாக விளையாடும் .இது தென் ஆப்பிரிக்கா அணிக்கும் விதிவிலக்கல்ல. அதே சமயம் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சு வரிசையை கொண்டிருக்கும் அணிகளில் தென்னாபிரிக்கா அணியும் ஒன்று .அதேபோல் நாங்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்டில் அபாரமாக விளையாடினோம். அதோடு வெளிநாட்டு மண்ணில் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை தந்துள்ளது . பேட்டிங் மற்றும் பவுலிங்கை பார்க்கும்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் திறமை எங்களிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது “இவ்வாறு அவர் கூறியுள்ளார்