Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாகிறாரா கே.எல்.ராகுல்….? கசிந்த முக்கிய தகவல் ….!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது .

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது .இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும், துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர் . ஆனால் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக துணை கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் இருந்து விளக்கியுள்ளார் .

இதனால் அவருக்கு பதிலாக இந்திய ‘ஏ ‘அணியின் கேப்டனாக பிரியங்க் பாஞ்சல்  அணியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அனைத்து வடிவிலான போட்டியிலும் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6 சதம் உட்பட 2321 ரன்கள் குவித்துள்ளார்.

Categories

Tech |