Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : வலியால் துடித்துப்போன பும்ரா ….! கணுக்காலில் ஏற்பட்ட காயம்….!!!

தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது .

இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது .இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. இதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது .இதில் ஜஸ்பிரித் பும்ரா  தனது முதல் ஓவரிலேயே தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கரை ஆட்டமிழக்கச் செய்தார் .

மேலும் தொடர்ந்து பந்து வீசி வந்தார். இந்நிலையில் 5-வது ஓவரில் அவர் பந்து வீசிய போது கணுக்காலில்  சுளுக்கு ஏற்பட்டதால் மைதானத்திலேயே அவதிப்பட்டார் .இதனால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது . இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் பீடிங்கில் களமிறங்கினார் .இதனை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |