Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: “கபில் தேவின்” சாதனை முறியடிப்பு…. புதிய சாதனை படைத்த பிரபல வீரர்….!!

அஸ்வின் கபில் தேவின் சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் 2- ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4 ஆம் தேதி மொகாலியில் தொடங்கியுள்ளது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. இதில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 129.2 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. அப்போது ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 228 பந்துகளுக்கு 175 ரன்கள் குவித்துள்ளார். அதன்பின்பு விளையாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் 65 ஓவர்களில் இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. அதன்பின்பு 2 ஆவது இன்னிங்சிலும் இலங்கை அணி பெரிதாக சோபிக்காததையடுத்து இந்தியா 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணி வீரர் சரித் அஸ்வின் பந்துவீச்சில் அவுட்டாகியுள்ளார். இதனால் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 435 விக்கெட்டுகள் கைப்பற்றியதையடுத்து அவர் கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார். ஆகையினால் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதற்கிடையே இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்திலுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |