Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: கிஷனின் “அபார ஆட்டத்திற்கு” இதான் காரணம்…. வீக்னஸை கண்டறியாத பவுலர்கள்….!!

லக்னோவில் துவங்கியுள்ள இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா 20 ஓவர்களின் முடிவில் 199/2 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.

இலங்கை இந்திய அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் லக்னோவில் நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் இலங்கை அணி டாஸ்ஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆகையினால் இந்திய அணியிலிருந்து ஓபனர்களாக முதலில் களமிறங்கிய ரோகித் ஷர்மாவும், கிஷனும் தொடர்ந்து ரன்களை குவிக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனையடுத்து ரோகித் சர்மா 44/32 ரன்களை குவித்து இலங்கை அணியின் லஹிரு குமராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.

அதன் பின்பும் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 89/56 ரன்களை குவித்து ஷனகாவின் பந்து வீச்சில் கேட்ச் ஆகியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து ஜடேஜாவும், ஷ்ரேயஸ்ஸும் அபாரமாக விளையாடியதில் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 199/2 ரன்களை குவித்து அசத்தியுள்ளது. இதற்கிடையே மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ரன்களை குவிக்க திணறிய இஷான் கிஷன் எப்படி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இவ்வாறு அபாரமாக ஆடியுள்ளார் என்பதை பார்ப்போம்.

அதாவது மேற்கிந்திய தீவுகளின் பவுலர்கள் கிஷனின் காலுக்கு நேராக லெந்த் பால்களை போட்டுள்ளார்கள். இதனால் அவரால் தடுமாறி ரன்களை குவிக்க முடியாமல் போயுள்ளது. ஆனால் இலங்கை அணியின் பவுலர்கள் 4, 5, 6 ஆகிய ஸ்டெம்ப் லைனில் பந்தினை வீசியுள்ளார்கள். இதனால் கிஷன் எந்தவித நெருக்கடியுமின்றி அபாரமாக விளையாடி ரன்களை குவித்துள்ளார்.

Categories

Tech |