Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: 2 ஆவது போட்டி… “ருதுராஜ்க்கு வாய்ப்பு” கிடைக்குமா…? ரோகித்தின் திட்டம் என்ன?….!!

இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது போட்டிக்கான இந்திய உத்தேச அணியில் ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள்.

இலங்கை இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டி நேற்று லக்னோவில் தொடங்கியுள்ளது. இதில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையே இந்திய அணியில் ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 2 ஆவது போட்டியிலும் இவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் ருத்ராஜ்க்கு காயத்தின் தன்மை சற்று அதிகமாக இருப்பதாலும், தற்போதைய இந்திய அணி முதல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் ரோகித் 2 ஆவது போட்டியில் மாற்றத்தை கொண்டு வர மாட்டார் என்று கருதப்படுகிறது. இதனையடுத்து இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது இந்திய உத்தேச அணியில் ரோகித் சர்மா, இஷன் கிஷன், சஞ்சு, ஜடேஜா, வெங்கடேசன் ஐயர், பும்ரா, புவனேஸ்வர், படேல், சாகல், தீபக், ஸ்ரேயஸ் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |