Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : மாஸ் காட்டிய தவான், இஷான் கிஷன் …. இலங்கையை வீழ்த்தி …. இந்தியா அபார வெற்றி …..!!!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில்  ஷிகர் தவான் 86 ரன்கள் எடுத்து அசத்தினார் . 

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி     3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதியாக 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது . இதில் அதிகபட்சமாக சமிகா கருணாரத்னே 43 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா சார்பில் யுஸ்வேந்திர சாகல், குல்தீப் யாதவ் மற்றும் தீபக் சாகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி 263 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான்-  பிரித்வி ஷா களமிறங்கினர். இதில் பிரித்வி ஷா 43 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தாக அறிமுக வீரர் இஷான் கிஷன், தவானுடன் ஜோடி சேர்ந்தார். இதில் ஷிகர் தவான் – கிஷன் கிஷன் ஜோடி  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. குறிப்பாக இஷான் கிஷான் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார்.

இதைத்தொடர்ந்து அதிரடி காட்டிய இஷான் கிஷன் 8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து விளாசி 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய மணிஷ் பாண்டே 26 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து சூரியகுமார் யாதவ் தவானுடன் ஜோடி சேர்ந்தார் .இதில் சூரியகுமார் யாதவ் 31 ரன்களும் தவான் 86 ரன்கள் எடுக்க இறுதியாக இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை குவித்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Categories

Tech |