Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : ருதுராஜ் கெய்க்வாட் அவுட் ….! 11 ஓவர் முடிவில் இந்தியா 81 /1…!!!

ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் –  ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.இதில் ருதுராஜ் 18 பந்துகளில் 21 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் .இதன் பிறகு களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 17 ரன்களும் ,கேப்டன் தவான் அட்டமிழக்காமல் 40 ரன்கள் குவித்துள்ளார் .இதனால் இந்திய அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழப்பிற்கு 71  ரன்களை எடுத்துள்ளது.

Categories

Tech |