இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது.இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கெதிரான தொடரின் போது இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதனால் 3-வது டி20 போட்டி தொடங்கும் முன்பே கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால் அவர் டி20 தொடரிலிருந்து விலகினார்.தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஹசரங்காவுக்கு இன்னும் கொரோனா பாதிப்பிலிருந்து மீளவில்லை என்பது தெரியவந்தது. இதனால் நாளை தொடங்கும் இந்திய அணிக்கெதிரான எதிரான டி20 தொடரிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.