இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது .
ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் – ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமிறங்கினர். இதில் தவான் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதன் பிறகு களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 15 பந்துகளில் 9 ரன்கள் குவித்து வெளியேற, அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாடுடன் , நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார் . இதில் ருதுராஜ் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .இதனால் இந்திய அணி 7 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை குவித்துள்ளது.