Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL TEST: “100 ஆவது போட்டி”…. இலக்கை அடைவார “கோலி”…. காத்துகிட்டிருக்கும் லெஜெண்ட்ஸ் லிஸ்ட்….!!

இலங்கைக்கு எதிராக மார்ச் 4ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் கோலி 38 ரன்களை அடித்தால் டெஸ்ட் தொடர்களில் 8000 ரன்களை குவித்துள்ள 5 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்து விடுவார்.

இலங்கை அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் 4 ஆம் தேதி துவங்கவுள்ளது. அவ்வாறு நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் தொடர் கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கோலி 38 ரன்களை அடித்தால் டெஸ்ட் தொடர்களில் 8000 ரன்களை குவித்துள்ள 5 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்து விடுவார்.

இந்த சாதனை பட்டியலில் சச்சின் 154 இன்னிங்சில் 8000 ரன்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். அதன்பின்பு திராவிட் 158 இன்னிங்சிலும், சேவாக் 160 மற்றும் கவாஸ்கர் 166 இன்னிங்சிலும் 8000 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்கள். இவ்வாறு இருக்க லக்ஷ்மனை பின்னுக்குத் தள்ளி கோலி 168 ஆவது இன்னிங்சில் 5 ஆவது இடத்தை பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |