இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நாளை தொடங்குகிறது.
இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது .இந்நிலையில் போட்டியை காண பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என மேற்கு வங்காள மாநில அரசு கூறியிருந்தது . ஆனால் இதற்கு பிசிசிஐ அனுமதி கொடுக்கவில்லை.
இதன் காரணமாக முதல் டி20 போட்டி ரசிகர்கள் இன்றி நடைபெற உள்ளது. மேலும் விளம்பரதாரர்கள் மற்றும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கு ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என பெங்கால் கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ-க்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.