Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS WI : தொடரை வெல்லுமா இந்தியா….? இன்று 2-வது ஒருநாள் போட்டி….!!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று  அகமதாபாத்தில் நடைபெறுகிறது.இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றால் தொடரை வென்றுவிடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அதேசமயம்  வெஸ்ட் இண்டீஸ் அணி கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் களமிறங்கும்.  மேலும் 2-வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் அணிக்கு திரும்புவதால் ,தொடக்க வீரராக அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம்  முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு டாப் கிளாசாக இருந்தது. மேலும் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா முதல் போட்டியிலேயே ஜொலித்தார். இதனால் 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா இதே ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதுமானது.அதேபோல் விராட் கோலி கடந்த போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்தது வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.இதனால் இன்றைய போட்டியில் அனைவரின் கண்களும் விராட் கோலி மீது திரும்பியுள்ளது.மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொலார்ட், நிக்கோலஸ் பூரான், டேரன் பிராவோ, ஹோல்டர் ஆகியோர் பெரிய அளவில் ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடிதர முடியும்.

உத்தேச அணி:

இந்தியா – ரோஹித் சர்மா (கேப்டன்),இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ்/கே.எல். ராகுல், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

வெஸ்ட் இண்டீஸ் – பிராண்டன் கிங், ஷாய் ஹோப் , டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட்(கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், அல்ஸாரி ஜோசப், அகீல் ஹொசைன், கெமர் ரோச்.

 

Categories

Tech |