வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்குக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. இதில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில், 7 சிக்சர், ஒரு பவுண்டரி என 65 ரன்கள் விளாசினார்.இதைதொடர்ந்து வெங்கடேஷ் அய்யர் 35 ரன்னும் , ஸ்ரேயாஸ் 25 ரன்னும் , இஷான் கிஷன் 34 ரன்னும் குவித்தனர்.இதையடுத்து 185 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அந்த அணி தடுமாறியது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட் இழந்து தடுமாறியது.இதில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 61 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்னில் சுருண்டது .இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டி கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.