Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS AUS-W 3-வது டி 20 : இந்திய அணியை வீழ்த்தி ….தொடரை வென்றது ஆஸ்திரேலியா ….!!!

இந்திய மகளிர் அணிக்கு எதிராக நடந்த 3-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர்  அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வந்தது.இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.இதையடுத்து நடந்த 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20  போட்டி இன்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் களமிறங்கியது .இறுதியாக 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய          பெத் மூனி  61 ரன்களும் , தஹ்லா  மெக்ராத்  44 ரன்களும்  குவித்தனர். இதன் பிறகு 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது .இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி  கைப்பற்றியது.

Categories

Tech |