Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS AUS-W : இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா …. 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி ….!!!

இந்தியா மகளிர்  அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

இந்திய மகளிர்  அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு  இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹரப் பார்க் மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 86 ரன்கள் எடுத்தார் .ஆஸ்திரேலியா தரப்பில் தஹ்லா மெக்ராத்  3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதன்பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது .இதனால் 52 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து  திணறியது. இதன்பிறகு இணைந்த தஹ்லா மெக்ராத் – மோனி  ஜோடி அதிரடி காட்டினார் . இது தொடக்க வீராங்கனை மோனி இந்திய அணியில் பந்துவீச்சை அடித்து விளாசினார். இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர் .இதில் அதிரடியாக விளையாடிய  மோனி சதம் அடித்து அசத்தினார் .இதில் சிறப்பாக விளையாடி வந்த தஹ்லா மெக்ராத் 74 ரன்னில் ஆட்டமிழந்தார்

இதனால்  கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது .அப்போது இந்திய வீராங்கனை கோஸ்வாமி இறுதி ஓவரை வீசினார் .இதில் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கோஸ்வாமி வீசிய கடைசி பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டது. இதனால் கடைசி ஒரு பந்தில் 2 ரன் தேவைப்பட்டது . இதில் ஆஸ்திரேலிய வீராங்கனையான ஹேரி 2 ரன் எடுக்க இறுதியாக 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2- 0என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.

Categories

Tech |