Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS NZ-W : தொடரை வென்றது நியூசிலாந்து அணி ….! 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக மேஹனா – ஷஃபாலி வர்மா ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

இதில் ஷஃபாலி 51 ரன்களில் ஆட்டமிழக்க, மேஹனா 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தீப்தி சர்மா 69 ரன்கள் குவித்தார்.இதனால் 49.3 ஓவரில்  இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது .இதன்பின் களமிறங்கிய  நியூசிலாந்து அணி 280 ரன்கள் இலக்காக கொண்டு விளையாடியது.இறுதியாக நியூசிலாந்து அணி 49.1 ஓவரில் இலக்கை எட்டி  3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

Categories

Tech |