சிலிண்டர்களை புக்கிங் செய்யவும் புதிய இணைப்புகளை பெறவும் இண்டேன் கியாஸ் நிறுவனம் மிஸ்டு கால் கொடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது
கியாஸ் சிலிண்டர்களை புக்கிங் செய்யவும், புதிய இணைப்புகளை பெறவும் மிஸ்டு கால் கொடுக்கும் வசதியை இண்டேன் கேஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகையால் சிலிண்டர் பதிவு செய்வதற்கு 84549-55555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் சிலிண்டர்கள் உடனடியாக புக்கிங் செய்யப்படும். இந்த திட்டத்தினை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது கேஸ் சிலிண்டர் பயன்பாடு என்பது கடந்த 2014ஆம் ஆண்டு 55.9 சதவீதமாக இருந்தது எனவும், ஆனால் தற்போது 99 சதவீதமாக அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
எனவே மக்களின் அத்தியாவசிய தேவையான கியாஸ் சிலிண்டர் எந்தவித நேர தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மிஸ்டு கால் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்தியா ,தமிழ்நாடு-புதுச்சேரி செயல் இயக்குனர் மற்றும் மாநில தலைவர் ஜெயதேவன், மார்க்கெட்டிங் இயக்குனர் குர்மீத்சிங் போன்றோர் கலந்து கொண்டனர்.