Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம்… ஜம்முவில் அதிவிரைவு குழு… பணிகள் தீவிரம்…!!

ஜம்முவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தையொட்டி ஜம்முவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதி விரைவுக் குழுவையும் காவல்துறையையும் பயன்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் அத்துமீறல் காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்முவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜம்முவில் சுதந்திர தினத்தன்று முக்கிய நிகழ்வாக கருதப்படுவது மினி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் அணிவகுப்பு. இதனால் அப்பகுதி மூடப்பட்டு சில நூறு நபர்களை மட்டுமே சுதந்திர தின விழாவுக்கு அனுமதிக்க ஜம்மு நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

இதுதொடர்பாக காவல் துறை தரப்பில், ஜம்மு – பதான்கோட் மற்றும் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன்பின்பே அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் காவலர்கள், மத்திய ஆயுதப் படை பிரிவு காவலர்கள் 24 மணி நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளில் யாரேனும் காணப்பட்டால் உடனடியாக காவலர்களுக்கு தகவல் கொடுக்க பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |