75-ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் எதற்காக ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என்பது பலரும் அறிந்ததில்லை. அதாவது 1945 ஆகஸ்ட் 15-ல் நடந்த இரண்டாம் உலகப் போர் இறுதியில் தோல்வி அடைந்த காரணத்தினால் ஜப்பானிய வீரர்கள் ஆங்கிலேயர்களின் கிழக்கு ஆசிய கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம் சரணடைந்துள்ளனர். எனவே தான் இந்த தேதியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க மவுண்ட் பேட்டன் முடிவு செய்துள்ளார்.
ஆனால் ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு நேரத்தில் 12 மணியளவில் புதிய நாள் ஆரம்பமாகும். அதனால் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 நள்ளிரவு நேரத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் சுதந்திரம் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு முன்பே ஆங்கிலேயர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15-ஆம் தேதி நள்ளிரவில் இது அமலுக்கு வந்துள்ளது.