Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம்… “பாதுகாப்பு முன்னெச்சரிக்கை”… காஷ்மீரில் செல்போன் இணைய சேவை ரத்து…!!

சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கையாக காஷ்மீரில் செல்போன் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

சுதந்திர தின பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் செல்போன் இணைய சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் செல்போன் சேவையில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

எல்லையில் அமைதியை நிலைநாட்டும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ஜம்மு எல்லையில் இப்பொழுது வரை எந்த விதமான தாக்குதலும் நடக்கவில்லை என்றும் எல்லை பாதுகாப்புப்படை ஐ.ஜி ஜம்வால் தெரிவித்துள்ளார். அமைதியைக் கெடுக்கும் வகையில் எவரேனும் நடந்துகொண்டால் தகுந்த பதிலடி தரப்படும் என்றும் ஜம்வால் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |