கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பச்சை மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக அம்மாவட்டம் மாற்றப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனோ நோய் பாதிப்பு இல்லாமல் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனோ பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த நபர் ஒருவருக்கு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனால் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டு உள்ளது. எனவே பச்சை மண்டலத்திற்கான ஊரடங்கு தளர்வு அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வழங்கப்பட இருந்த நிலையில், அவை அனைத்தும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளன.
ஆரஞ்சு மண்டலத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அனைத்தும் இனி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு விதிக்கப்படும். இந்த சம்பவம் அம்மாவட்ட மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.