74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் டிஜிட்டல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐந்து மாதங்களுக்கு அன்லிமிட்டட் ஆன்நெட் கால், டேட்டா உள்ளிட்ட வசதிகளை தருவதாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் டிஜிட்டல் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை செல்லும் என தெரிவித்துள்ளது. இதில், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், கடிகாரங்கள் ஸ்மார்ட் வாட்ச்கள் ஆகியவை 25 லிருந்து 60 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது.