பாகிஸ்தானை போலவே ஆப்கானிஸ்தான், நேபாளம் நாடுகள் இரும்பு சகோதரர் போல செயல்பட வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியா, ஜப்பான் மற்றும் அதனை சுற்றியுள்ள பல நாடுகள் சீனாவின் ஆதிக்க தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலையில் அமெரிக்கா, தென்சீனக்கடலில் வர்த்தகம், கொரோனா வைரஸ் மற்றும் லடாக் மோதல் ஆகிய பல பிரச்சினைகள் பற்றி சீனாவை விமர்சனம் செய்து வருகிறது. சென்ற வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, சீனாவிற்கு எதிராக ஒன்றாக செயல்பட வேண்டும் என பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்கா நாடு சீனாவிற்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் சீனா பிராந்தியத்தில் இருக்கின்ற நாடுகளை குறிவைத்து இருக்கின்றது. சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கும் நேபாளம் தற்போது இந்தியாவிற்கு எதிராக திரும்பி இருக்கின்றது. அடுத்ததாக பாகிஸ்தானை தூண்டில் புழுவாக பயன்படுத்தி அதன் மூலமாக ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தை தங்கள் பக்கம் பறப்பதற்கு சீனா முயற்சி செய்து வருகிறது.
இதன் முதல் கட்டமாக சென்ற வாரம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வங்காளதேச பிரதமரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அத்தகைய பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசியதாக கூறப்படுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாக நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சந்திப்பு ஒன்றை சீனா நடத்தி சீனாவுக்கு பாகிஸ்தானை போல் ‘ இரும்பு சகோதரராக இருக்குமாறு’ நேபாளம், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சீன நாட்டின் மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யி சீனா, நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நான்கு நாடுகளின் உடைய வெளியுறவு அமைச்சர்கள் இத்தகைய கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் நான்கு நாட்டு அமைச்சர்களும் கொரோனா தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் அண்டை நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுபொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தல் பற்றி விவாதம் நடத்தினர்.மேலும் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் நேபாளத்திலும் ‘இரும்பு சகோதரர்’ பாக்கிஸ்தானைப் போல இருக்குமாறு சீனா சென்ற செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது. கொரோனா வைரஸ் பரவாமல் சமாளிக்க நான்கு நாடுகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என சீனா வலியுறுத்தியது. மேலும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ‘இரும்பு சகோதரர்’ உறவுகளை மேற்கோள் காட்டிய வாங், ‘வர்த்தக மற்றும் போக்குவரத்து தாழ்வாரங்களில் செயல்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.