Categories
தேசிய செய்திகள்

இந்த வருடத்தில் ஒரு ரூபாயும் சம்பாதிக்கவில்லை…. கண்ணீர்விடும் கேஸ்மீர் தொழிலாளி…!!

காஷ்மீர் மக்கள் அனைவரும் தங்களது அன்றாட வாழ்வை முழுமையாக இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மக்கள் அனைவரும் கடந்த ஒரு ஆண்டாகவே தங்களுடைய வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். தற்போது வரை அதில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு மெதுவாக முன்னேறி வந்த அவர்களை, கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு பாதாளக் குழியில் தள்ளி விட்டது. அங்கு சுற்றுலா துறையின் வருமானமும் கடந்த பத்து ஆண்டுகளை விட மிகவும் குறைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சோலிபோரா பகுதியில் பஸ் கண்டக்டராக வேலை செய்து வந்த நசீர் அகமது, ஊரடங்கு காரணமாக வேலையை இழந்து விட்டு வீட்டில் முடங்கி இருக்கிறார். அவரைப்போலவே கடை நடத்தி வந்த அனைவரும் கடையை பாதி திறந்து வைத்துக்கொண்டு மிகுந்த சோகத்துடன் இருக்கிறார்கள்.

காஷ்மீர் மக்கள் அனைவரும் தங்களது அன்றாட வாழ்க்கையில் இவ்வாறான பிரச்சினைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே சுற்றுலா பயணிகளின் வருகை இருந்துள்ளது. ஸ்ரீ நகரில் இருக்கின்ற நைஜீன் நதியில் உள்ள படகு இல்லம் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் காஷ்மீர் தொழில்துறையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரையில் பத்தாயிரம் கோடி ரூபாய் பொருளாதார இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற சந்தைகளில் மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல் புறாக்கள் மட்டும் பறந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன.

மூன்று படகு வீடுகளை வைத்திருக்கும் குலாம் காதீர் என்பவருக்கு ஒரு பைசா கூட வருமானம் கிடையாது. இந்த வருடத்தில் தற்போதுவரை ஒரு ரூபாய் கூட நான் சம்பாதிக்கவில்லை. வாழ்வதற்கு வேறு எந்த வழியும் எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். வாடகை டாக்ஸி ஓட்டுநர்களின் நிலைமையும் இவ்வாறாகவே உள்ளது. இந்நிலையில் இந்த வருடத்தின் இறுதிக்குள் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்ற நம்பிக்கையில் மக்கள் மற்றும் வணிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |