Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரசிகர்கள் என்னை ஒரு ஹீரோவா உணர வச்சிட்டாங்க”… அவங்களுக்கு ரொம்ப நன்றி… ட்வீட் செய்த அஸ்வின்….!!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை  317 ரன்கள் வித்தியாசத்தில்  இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 என்ற கணக்கில்  இந்திய அணி சமநிலை ஆக்கியது.

இந்த கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர்  அஸ்வின்  முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்தும்,  இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்தும் சிறப்பாக விளையாடினார். அதனால் அவர் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,” நான் தற்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிக்காட்ட  முடியவில்லை. ஆனால்,  என்னை விரும்பிய அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். என்னை ஒரு ஹீரோவாக ரசிகர்கள் உணரவைத்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |