Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்…. சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்…. நெல்லையில் பரபரப்பு….!!

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் முன்பு சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், வள்ளியூர் நகர செயலாளர் வேம்பு சுப்பையா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் வள்ளியூரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் காவல்துறையினர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.

Categories

Tech |