Categories
அரசியல்

வாவ்….!! ஆப்பிளின் அட்டகாசமான அறிமுகம்…. எதிர்பார்ப்புடன் வாடிக்கையாளர்கள்….!!

இந்தியாவில் ஐபோன் எஸ்இ 2022 ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

உலக புகழ்பெற்ற ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஆப்பிள் ஐபோனில் 4.7 இன்ச் ரெட்டினா எச்.டி டிஸ்பிளே 750*1334 ரெஷலியூஷன், 3262ppi பிக்சல் டென்சிட்டி, 625 nits வரை பிரைட்னஸ் ஆகியவை உள்ளது. இதுவரை உள்ள ஸ்மார்ட்போன்களிலேயே இந்த போன் தான் கடினமான கண்ணாடியை கொண்டுள்ளது. இந்த ஐபோனின் பின்பக்கம் 12 மெகாபிக்சல் கேமரா சென்சார் f/1.8 வைட் ஆங்கிள் லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா டீப் ஃயூஷன், ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர் 4,  போட்டோ கிராஃபிக் ஸ்டைல்ஸ் ஆகியவை உள்ளன.

இந்த கேமரா சப்பையேர் கிரிஸ்டல் லென்ஸ் கவர் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த போன் 60fps வரை 4கே வீடியோ ரெக்கார்டிங்கை வழங்குகிறது. மேலும் ஐபோனின் முன்பக்கத்தில் 7 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா f/2.2 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த செல்ஃபி கேமரா நேர்ச்சுரல், ஸ்டேஜ், ஸ்டுடியோ, ஸ்டேஜ் மோனோ, ஹைகீ போனோ உள்ளிட்ட 6 போர்ட்ரைட் லைட்டிங் எஃபெக்ட்ஸ்களை சப்போர்ட் செய்கிறது. மேலும் முன்பக்க கேமராவில் 1080p ரெக்கார்டிங்கை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து நைட்மாட் டைம் லேப்சூம், டைம்லேப்ஸ் வீடியோவும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த ஐபோன் எஸ்இ 2022 பயோமெட்ரிக் ஆந்தண்டிகேஷனுக்காக  ஃபிங்கர்பிரின்ட் சென்சார் கொண்ட டச் ஐடியுடன் வழங்குகிறது. இதிலுள்ள இன்பில்ட் பேட்டரி ஒரு முறை  சார்ஜ் செய்தால் 15 மணி நேரம் விடியோ பிளேபேக் நேரத்தையும், 50 மணி நேர ஆடியோ பிளேபேக் நேரத்தையும் வழங்கியுள்ளது. இந்த போனுக்கு 20W  வயர்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சார்ஜர் போனுடன் வராது.

இந்த போனில் 64 ஜிபி மாடலின் விலை ரூ.43,900-ஆகவும், 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.48,900-ஆகவும், 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.58,900- ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபோன் மிட்நைட், ஸ்டார்லைட், ப்ராடெக்ட் ரெட் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 2022 மார்ச் 18-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |