உலக சுகாதார அமைப்பிடம் கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்குமாறு பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அங்கீகாரம் கொடுக்கவில்லை. மேலும் இதனை அவசர பயன்பாட்டு பட்டியலிலும் சேர்க்க படவில்லை. இதனையடுத்து கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பயோடெக் ஹைதராபாத் நிறுவனம் அங்கீகாரத்தை பெறுவதற்காக தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு பற்றிய விவரங்கள் என மூன்று கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் போன்ற அனைத்து தகவல்களையும் சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளன.
மேலும் இதை பற்றி உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகின்றனர். இதனை அடுத்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு தடுப்பூசிக்கு விரைவில் அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் தகவல்களை அளிக்குமாறு பாரத் பயோடக் நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கோவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க சில நாட்கள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளனர்.