இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகவில் ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய துணை கண்டத்தில் அல்கைதா ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மண்ட் மற்றும் கந்தக மாகாணங்கள் அனைத்தும் தலிபான்கள் தலைமையில் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் , அல்கைதா மற்றும் அதனுடன் தொடர்பு கொண்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான பகுப்பாய்வு ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்பு குழுவின் அறிக்கையின் 26-வது சட்டத்தின் கீழ் இது வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் பங்களாதேஷ், இந்தியா, மியான்மர் மற்றும் பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளில் 150 முதல் 200 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் அதே சமயத்தில் பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் மரணத்திற்கு பழி வாங்கும் எண்ணத்தில் பிராந்தியத்தில் பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையில் ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகள் உள்ளனர் என அறிக்கை வெளியாகியுள்ளது.