கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இயங்கிவரும் மருந்து நிறுவனங்களில் இதுவரை நடந்த தீ விபத்துகளின் விவரம் பின்வருமாறு:
1. 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள விந்தியா ஆர்கானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 10 பேர் படுகாயம்
2. 2020 ஆம் ஆண்டு ஜூலை 14 விசாகப்பட்டினத்தில் உள்ள ராம்கீ சிஇபிடி கரைப்பான் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்தவித சேதமும் இல்லை
3. 2020 ஜூலை 14ஆம் தேதி ஆந்திரபிரதேசத்திலுள்ள ஜேஎன் பார்மா சிட்டி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் காயம்
4. 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சுவேன் மருந்து நிறுவனத்தில் நடந்த தீவிபத்தில் எந்தவித சேதமும் இல்லை
5. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆந்திர பிரதேசத்தில் உள்ள அரவிந்தோ மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்
6. 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ஜிடிமெட்லா பகுதியில் உள்ள சூட்டிக் பார்மா பிரைவேட் லிமிடெட் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு 3 பேர் படுகாயம்
7. 2017 ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள அசிகோ பயோஃபோர் ஜே என் பார்மா சிட்டி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு, 3 பேர் படுகாயம்
8. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள சன் பார்மா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்
9. 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள சைனர் லைஃப் சயின்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம்
10. 2013 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி மெடாக்கில் ள்ள டாக்கர் ரெட்டி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
11 .2013 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ஹெட்ரோ மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு