Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,213 பேருக்கு கொரோனா …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 3,000 என்ற அளவில்தான் தான் இருந்து வந்தது. ஒரு நாளைக்கு 3,200 3,500 என்று தான் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது ஒரே நாளில் 4 ஆயிரத்து 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இப்படி வந்துள்ள எண்ணிக்கை நிச்சயமாக ஒரு பெரிய விஷயமாக தான் பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 1, 559 பேர் ஒரே நாளில் குணம் அடைந்து இருக்கிறார்கள். ஒரே நாளில் குணம்  அடையக் கூடியவர்கள் எண்ணிக்கையும் மிக அதிகமாகிறது. இதனால் குணமடைவர்களின் வீதம் 31.15 சதவீதமாக இருக்கின்றது. கடந்த வாரம் கூட 30க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது 31 ..15  என்ற அளவில் இருக்கின்றது.

நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் மட்டும் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக மும்பை, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் மட்டும் சுமார் அறுபது சதவீதத்துக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த தாக்கம் அதிகரித்து வரக்கூடிய நிலையில் நிறைய முன்னெடுப்புக்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகின்றது.

Categories

Tech |