இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகின்றது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கடந்த 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,535ஆக அதிகரித்துள்ளது. 1,47,195 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,41,842 பேர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவுக்கு 8 ஆயிரத்து 498 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4ஆவது இடம் வகிக்கின்றது. அமெரிக்காவில் 20 லட்சம், பிரேசிலில் 8 லட்சம்,ரஷ்யாவில் 5 லட்சம், இந்தியாவில் 2.9 7 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 97,648 பேரும், தமிழ்நாட்டில் 38,716 பேரும், டெல்லியில் 34,687 பேரும், குஜராத்தில் 22,067 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளார்.