Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. பாதிக்கப்படும் வளரும் நாடுகள்… ஐ.நா கவுன்சிலில் வருத்தம் தெரிவித்த இந்தியா…!!!

உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரால் வளரும் நாடுகள் பாதிப்படைந்திருப்பதாக இந்தியா ஐ.நா  பாதுகாப்பு கவுன்சிலில் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ஏழு வாரங்களை கடந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டில் நடக்கும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐநா விற்கான இந்திய நிரந்தர துணை பிரதிநிதியான ரவீந்திரா, இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பேசியிருக்கிறார்.

ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா தொடக்கத்திலிருந்தே ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் இரண்டு தரப்பிலும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் எனவும் அப்பாவி மக்களின் உயிர் அபாயத்தில் உள்ள போது பேச்சுவார்த்தை தான் தீர்வாக அமையும் என்றும் தெரிவித்தார்.

முன்பை காட்டிலும் தற்போது உக்ரைன் நாட்டின் நிலைமை மோசமடைந்து வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். எனவே இந்தியா தன்னால் முடிந்த நிவாரண உதவிகளை அந்நாட்டிற்கு செய்துகொண்டிருக்கிறது. இனிமேலும் செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |