Categories
தேசிய செய்திகள்

இந்திய விவசாயம் நவீனமயமாக்கல்…. பிரதமர் மோடி பேச்சு….!!

 பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், இன்றைய வாழ்க்கையில் எல்லாத்துறையிலும் நவீனமயம் அத்தியாவசிய தேவையாக மாற்றப்படவேண்டும் என்று வெளிப்படுத்தியுள்ளார்.

நரேந்திர மோடி 2014- ஆம் ஆண்டு முதன் முதலாக பிரதமர் பதவியினை ஏற்றுள்ளார். அப்போது அவர் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று, அகில இந்திய வானொலியில் “மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியில் மனதில் தோன்றுவதை வெளிப்படுத்தி வந்தார். அந்த வகையில் 75-வது “மனதின் குரல்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியது என்னவென்றால், சென்ற ஆண்டு இதே மார்ச் மாத இறுதியில் ஜனதா ஊரடங்கு என்ற வார்த்தையை நாடு முதல் முதலாக கேட்டு அறிந்தது. இந்த வார்த்தை ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சி அடைய செய்துவிட்டது.

இந்த கொரோனா ஊரடங்கு உத்தரவு  இதுவரை நாடு கண்டிராத ஒழுக்கமாகும். அதன்பின் கொரோனா வீரர்களை கௌரவப்படுத்வதும், மரியாதை அளிப்பதும், ஒளி எழுப்பியதும், விளக்குகளை ஏற்றியதும் ஆகும். இதையெல்லாம் கொரோனா வீரர்களின் இதயங்களை எந்த அளவுக்கு தொட்டது என்பதை நீங்கள் கற்பனை கூட செய்ய கொள்ள  முடியாது. அதனால்தான் அவர்கள் ஆண்டு முழுவதும் தளர்ச்சி அடையாமல் ஓய்வு ஒழிச்சலின்றி உறுதியுடன் உழைத்துள்ளார்.

அதன்பின் கொரோனா வைரஸின் தாக்குதலிலிருந்து உயிரினை காத்துக்கொள்ள தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி வந்துவிட்டது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா நிறைவேற்றி வருகின்றது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தடுப்பூசி திட்ட புகைப்படங்களுடன் புஷ்பா சுக்லா என்ற பெண் கடிதம் ஒன்றினை எழுதி அனுப்பியுள்ளார். அதில் அந்தப் பெண் கொரோனா  தடுப்பூசி வீடுகளில் உள்ள பெரியவர்கள் காட்டுகிற முக்கியத்துவத்தை  நான் “மனதில் குரல்” நிகழ்ச்சியின்போது குறிப்பிட வேண்டுமென்று கேட்டுள்ளார். இது அனைவருக்கும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாகும்.

இது போன்ற செய்திகளை நாட்டின் எல்லா மூலைகளில் இருந்தும் நாங்கள் கேட்டிருக்கிறோம். உத்திரப்பிரதேச மாநிலத்தில் 150 வயதான மூத்த தாய் ராம் துலையா முன்வந்து தடுப்பூசியினை போட்டுக்கொண்டனர். அதேபோன்று டெல்லியில் 107 வயதான கேவல் கிருஷ்ணா விருப்பப்பட்டு கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொண்டார். இதேபோன்று இன்றைய வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் நவீன மயம் அத்தியாவசிய தேவையாகி மாறிக் கொண்டு வருகின்றது.

அதிலும் மிகமுக்கியமாக  இந்திய விவசாயத்தில் நவீனமயமாக்கல் என்பது இக்கணத்தின் தேவையாக இருக்கின்றது. வேளாண் விவசாயத்துறையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிக படுத்துவதற்கும், பாரம்பரிய விவசாயம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்வதும், புதிய வாய்ப்புகளை உருவாக்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி “மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியில் மனதில் தோன்றியதை வெளிப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |