சர்வதேச மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்ததற்கு அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இந்தியா VS அமெரிக்கா நட்பு. நம்முடைய பிரதமரும் அமெரிக்க அதிபரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதனை அமெரிக்க அதிபர் பலமுறை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது ஹவ்டி மோடி என்ற நிகழ்ச்சியை நடத்தி மோடியை உற்சாகப்படுத்திய அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்புக்கு இந்த ஆண்டு இந்தியாவின் பிரதமர் மோடி விழா நடத்தினார்.
நமஸ்தே டிரம்ப் :
குஜராத் மாநிலத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியில் டிரம்ப்பை பங்கேற்கச் செய்து ஒரு லட்சம் பேர் முன்பு மோடியை பேச வைத்து அசத்தினார். இதனிடையே பல சந்தர்ப்பங்களில் கூட மோடி எனது நண்பன். இந்தியா எனது என்னால் மறக்க முடியாத நாடு என்றெல்லாம் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழ்ந்து தள்ளினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் , பிரதமர் மோடி நாட்பு உலக நாடுகள் அளவில் வெகுவாக பேசப்பட்டது.
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் :
கொரோனாவால் அமெரிக்கா பெரிதும் பாதிக்கப்பட்டு, வரலாறு காணாத பொருளாதார இழப்பை சந்தித்துள்ள நிலையில் மலேரியாவுக்கு பயன்படுத்தக்கூடிய ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அதிகமாக உற்பத்தி செய்யும் இந்தியா அமெரிக்காவுக்கு தர வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். கொரோனா பரவ தொடங்கியது முதல் இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்திருந்ததால் அமெரிக்காவுக்கு கொடுக்க சிக்கல் ஏற்பட்டது.
இந்தியாவின் மனித நேயம் :
இதுகுறித்து அமெரிக்க செய்தியாளர்கள் கேட்ட போது, இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து தரவில்லை என்றால் பின் விளைவுகளை சந்திக்கும் என்று மிரட்டினார். இதனை தொடர்ந்து மத்திய அரசு விதித்திருந்த தடையை நீக்கி அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைக் கொடுத்தது, மனிதநேயத்தின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு மருந்து கொடுப்பதாகவும் விளக்கம் அளித்தது.
டிரம்ப் மிரட்டல் :
இதனை தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் நண்பர் மோடி அப்படி இப்படி என்று எல்லாம் புகழ்ந்து புகழ்ந்து தள்ளினார். சீனாவிலிருந்து இந்தியாவுக்கு ஆடர் செய்த கொரோனா தடுப்பு மருந்துக்கள், மருத்துவ உபகரணங்களை கூட அமெரிக்காவுக்கு வாங்கிச் சென்றார். இந்தியாவை மட்டுமல்ல பல நாடுகளுக்கு செல்ல வேண்டிய கொரோனா தடுப்பு மருத்துவ சிகிச்சை கருவிகளை கூட மிரட்டி அமெரிக்காவுக்கு திரும்பி விட்டதாக பல நாடுகள் குற்றம்சாட்டின.
இந்தியாவை பகைத்த அமெரிக்கா :
இப்படி இந்தியாவுடன் நட்பாக இருந்த அமெரிக்கா தற்போது இந்திய அரசை பகைத்துக் கொள்ளும் வகையில், பிரதமர் மோடியுடன் நட்பை துண்டிக்கும் வகையில் செயல்படுவது மக்களுக்கே புரியாத புதிராகவே உள்ளது. இது உலக நாட்டு மக்களையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 1998 ஆம் ஆண்டு அமெரிக்க அரசால் நிறுவப்பட்டது தான் மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம்.இது சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்து வருவதாக கூறி, இந்தியாவை மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இணைத்துள்ளது மத்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கண்டனம் :
இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது “இந்தியா குறித்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) ஆண்டு அறிக்கையில் வெளியிட்ட குற்றச்சாட்டுகளை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்தியாவுக்கு எதிரான ஒருதலைபட்சமாக கூறப்படும் கருத்துக்கள் புதிதல்ல என்று இந்தியாவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
எள்ளி நகையாடும் நிலை :
நிமிடத்துக்கு நிமிடம் மோடி எனது நண்பர் மோடி எனது நண்பர் என புகழ்ந்து தள்ளிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இப்போது என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பில் உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. அதுவும் அமெரிக்காவில் செயல்படும் ஒரு அமைப்பு இந்தியாவை இப்படி எள்ளி நகையாடும் நிலைக்கு கொண்டு வந்தது ஒட்டுமொத்த இந்திய மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.