Categories
உலக செய்திகள்

இந்தியா – அமெரிக்கா இடையே மினி வர்த்தக ஒப்பந்தம்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக இந்தியா-அமெரிக்கா இடையே சிறிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-அமெரிக்கா இடையே ஆறு மாதங்களுக்கு மேலாக வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாக எஃகு, அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்காவின் உயர் வரிவிதிப்பில் விலக்கு அளிக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை இந்தியா முன்வைத்து வருகிறது. இதற்கு கைமாறாக தனது விவசாயம், பால்பொருட்கள், மருத்துவம், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிகம் சந்தை வாய்ப்புகளையும், வரி சலுகைகளையும் வழங்க இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக, இந்தியா-அமெரிக்கா இடையே சிறிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையே உறுதியான நட்பும், வர்த்தக உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்ற தீவிர எண்ணமும் இருப்பதால் மினி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |