இந்தியா அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 2ப்ளஸ் 2 பேச்சுவார்த்தையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பாக புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக சீனா இந்தியா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்எஸ்பர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாண்டியோ உள்ளிட்டோர் இந்தியா வந்துள்ளனர். இவர்களுடன் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக்கு பிறகு இந்தியா அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் ஒத்துழைப்பு உட்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த ஒப்பந்தம் சீனா பாகிஸ்தான் நாடுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்தியாவுக்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. வரும் மூன்றாம் தேதி அமெரிக்கா அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.